ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி ஆகும்.
ஆரோன் பிஞ்ச்
ஆரோன் பிஞ்ச்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com