14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை
Published on

இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com