நடுவருடன் மோதல்- அல்சாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி

அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனால் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் ஜோசப்பின் பெயர் இடம்பெறவில்லை.
நடுவருடன் மோதல்- அல்சாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி
Published on

வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஐசிசி நடத்தை விதிகள் படி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் மோதல் போக்கை கொண்டிருப்பது குற்றமாகும். அதனடிப்படையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்சாரி ஜோசப்பும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர் மேற்கொண்டு விசாரனைக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் ஐசிசி கூறியுள்ளது.

அதேசமயம் அல்சாரி ஜோசப்பின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனையடுத்து இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அல்சாரி ஜோசப்பின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்க்வினோ மைண்ட்லிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com