சிக்சரில் வித்தியாசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சிக்சரில் வித்தியாசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Published on

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com