5 பேர் டக் அவுட்.. மிரட்டிய ஜான்சன்.. இலங்கை 42 ரன்னில் ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
5 பேர் டக் அவுட்.. மிரட்டிய ஜான்சன்.. இலங்கை 42 ரன்னில் ஆல் அவுட்
Published on

டர்பன்:

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

சிறப்பாக விளையாடி பவுமா (70) அடித்து அவுட் ஆனார். இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 13.5 ஓவர்களை மட்டுமே தாக்குபிடித்த இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். குறிப்பாக 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com