டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.ஆப்கானிஸ்தான் சார்பில் நயிப் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
Published on

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களம்கண்டன. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி ஆரம்பத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி ரன்குவிப்பில் தீவிரம் காட்டியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குர்பாஸ் (22 பந்துகளில் 27 ரன்கள்) மற்றும் இப்ராகிம் சத்ரான் (12 பந்துகளில் 10 ரன்கள்) எடுத்தனர். அடுத்து வந்த குலாப்தின் நயிப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மொத்தம் 35 பந்துகளை எதிர்காண்ட நயிப் 63 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்த வீரர்கள் கணிசமாக ரன் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட், லாக்கி ஃபெர்குசன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 183 எனும் இலக்கை துரத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com