வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி- இந்தியாவுக்கு 153 ரன்கள் இலக்கு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி- இந்தியாவுக்கு 153 ரன்கள் இலக்கு
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com