காமன்வெல்த் போட்டிகள்: தடகள வீரர் குல்வீர் சிங் வெண்கலம்.. இதுவரை வென்ற இந்திய வீரர்கள் முழு லிஸ்ட்

கென்யாவின் மேத்யூ கிப்சும்பா கிப்சாங் 13:23 நிமிட நேரத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
குல்வீர் சிங்
குல்வீர் சிங்
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெண்கலம்

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குல்வீர் நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி, பின்னர் நூலிழையில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்து 13 நிமிடம் 24.95 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தியாவின் 39வது பதக்கமாகும்.

கென்யாவின் மேத்யூ கிப்சும்பா கிப்சாங் 13:23 நிமிட நேரத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆஸ்திரேலியாவின் ராபின்சன் , 13:24 நிமிட நேரத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2026 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் குல்வீர் தற்போது இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சாதனை

முன்னதாக 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று அந்த பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை குல்வீர் சிங் படைத்தார்.

தற்போது 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒரே ஆண்டில் இரண்டு தடகளப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை குல்வீர் சிங் பெற்றார்.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்ற இந்தியர்கள்

தங்கம்

மீராபாய் சானு – பெண்கள் 48 கிலோ (பளுதூக்குதல்)

ஷர்மிளா தன்கர் – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)

திலீப் மஹாது காவிட் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)

அஸ்மிதா டே - பெண்கள் 48 கிலோ (ஜூடோ)

ஹர்ஷ் சிங் - ஆண்கள் - 60 கிலோ (ஜூடோ)

பிரீத்தி பவார் - பெண்கள் 54 கிலோ (குத்துச்சண்டை)

ஜெய்ஸ்மின் லம்போரியா - பெண்கள் 57 கிலோ (குத்துச்சண்டை)

சோமன் ரானா - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)

சாக்ஷி சவுத்ரி - பெண்கள் 51 கிலோ (குத்துச்சண்டை)

பிரியா கங்காஸ் - பெண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)

அருந்ததி சவுத்ரி - பெண்கள் 70 கிலோ (குத்துச்சண்டை)

சச்சின் சிவாச் - ஆண்கள் 60 கிலோ (குத்துச்சண்டை)

அங்குஷ் பங்கல் - ஆண்கள் 80 கிலோ (குத்துச்சண்டை)

வெள்ளி

ரிஷிகாந்த சிங் – ஆண்கள் 60 கிலோ (பளுதூக்குதல்)

முத்துப்பாண்டி ராஜா – ஆண்கள் 65 கிலோ (பளுதூக்குதல்)

ஞானேஸ்வரி யாதவ் – பெண்கள் 53 கிலோ (பளுதூக்குதல்)

வல்லூரி அஜய் பாபு – ஆண்கள் 79 கிலோ (பளுதூக்குதல்)

ஹர்ஜிந்தர் கவுர் – பெண்கள் 69 கிலோ (பளுதூக்குதல்)

சர்வேஷ் குஷாரே – ஆண்கள் உயரம் தாண்டுதல் (தடகளம்)

குல்வீர் சிங் – ஆண்கள் 10,000 மீ (தடகளம்)

எம். ஸ்ரீசங்கர் - ஆண்கள் நீளம் தாண்டுதல் (தடகளம்)

முகமது பாசில் - ஆண்கள் 100 மீ T47 (பாரா தடகளம்)

லவ்பிரீத் சிங் - ஆண்கள் +110 கிலோ (பளுதூக்குதல்)

யாமினி மௌர்யா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)

நீரஜ் சோப்ரா - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)

பிரவீன் சித்ரவேல் - ஆண்கள் மும்முறை தாண்டுதல் (தடகளம்)

ஜடுமணி சிங் மண்டெங்பாம் - ஆண்கள் 55 கிலோ (குத்துச்சண்டை)

சுபம் ஜூயல் - ஆண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)

லவ்லினா போர்கோஹைன் - பெண்கள் 75 கிலோ (குத்துச்சண்டை)

நரேந்தர் பெர்வால் - ஆண்கள் +90 கிலோ (குத்துச்சண்டை)

வெண்கலம்

ஜந்து குமார் – ஆண்கள் ஹெவிவெயிட் (பாரா பவர்லிஃப்டிங்)

பிந்தியராணி தேவி – பெண்கள் 58 கிலோ (பளுதூக்குதல்)

ஷில்பா கே. ஷைலா – பெண்கள் குண்டு எறிதல் F57 (பாரா தடகளம்)

சீமா கலிராம்னா - பெண்கள் வட்டு எறிதல் (தடகளம்)

தேஜஸ்வின் சங்கர் - டெகாத்லான் (தடகளம்)

யாஷ் வீர் சிங் - ஆண்கள் ஈட்டி எறிதல் (தடகளம்)

செல்வ பிரபு திருமரன் - ஆண்கள் Triple Jump (தடகளம்)

உன்னதி சர்மா - பெண்கள் -57 கிலோ (ஜூடோ)

குல்வீர் சிங் - ஆண்கள் 5000 மீட்டர் (தடகளம்)

X

Maalai Malar
www.maalaimalar.com