சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் லக்சயா சென்

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
lakshya sen
Published on

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் யுஷி தனகா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய லக்ச்யா சென் முதல் செட்டை 22-20 என வென்றார். இதற்கு பதிலடியாக ஜப்பான் வீரர் 21-15 என 2வது செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்சயா சென் 21-14 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று 2வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தேவிகா சிஹாக் ஆகியோர் முதல் சுற்றிலும், பி.வி.சிந்து 2வது சுற்றிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com