சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
ayush shetty
Published on

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, அயர்லாந்தின் நாட் நியூஜென் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-15 என வென்றார். இதற்கு பதிலடியாக அயர்லாந்து வீரர் 21-13 என 2வது செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அயர்லாந்து வீரர் 22-20 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

முன்னதாக, இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தேவிகா சிஹாக் ஆகியோர் முதல் சுற்றிலும், பி.வி.சிந்து 2வது சுற்றிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com