

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு 388 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தரப்பில் பென் டக்கெட் சதம் (141)விளாசி அதிரடி காட்டினார். ஜாக்கோப் பெத்தேல், ஜோ ரூட் அரைசதம் விளாசினர். இந்தியா தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், பிரின்ஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து இந்தியா விளையாட உள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெல்ல 1-1 என்ற சமனில் தொடர் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். இல்லையெனில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றும்.