பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த வங்காளதேசம் - வெண்கலம் வென்று அசத்தல்

முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த வங்காளதேசம் - வெண்கலம் வென்று அசத்தல்
Published on

பீஜிங்:

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com