உலக பேட்மிண்டன் போட்டி - இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது

உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது. உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.
சாத்விக்-சிராக் ஜோடி
சாத்விக்-சிராக் ஜோடி
Published on

டோக்கியோ:

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com