உகாண்டா நாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சாதனை

இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர்.ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
உகாண்டா நாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சாதனை
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் பிரேம்குமார். பேட்மிண்டன் வீரரான இவர், கடந்த 2-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை பாரா ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் பங்கேற்றார்.

இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர். இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் இரட்டையர் ஆண்கள் பிரிவில் தினேஷ்ராஜய்யாவுடன் இணைந்து, மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com