

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் வெங் ஹாங்யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் முதல் செட்டை 21-8 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 22-20, 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாயை 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் அயர்லாந்து வீரர் நாட் நியூயென் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.