பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகரா ஏமாற்றம்

இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகரா ஏமாற்றம்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அவனி லெகரா 420.6 புள்ளிகள் எடுத்து 5-வது இடம்பிடித்தார். இதன்மூலம் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com