பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: 50 மீட்டர் ஏர் ரைபிளில் அவனி லெகரா இறுதிக்கு முன்னேறினார்

இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: 50 மீட்டர் ஏர் ரைபிளில் அவனி லெகரா இறுதிக்கு முன்னேறினார்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com