ஆஸ்திரேலியா கிராண்ட்சிலாம் யாருக்கு?-இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும் ஆஷ்லே பார்டி- கோலின்ஸ்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி, கோலின்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஆஷ்லே பார்டி, மேடிசன் கெய்ஸ்
ஆஷ்லே பார்டி, மேடிசன் கெய்ஸ்
Published on

ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

சொந்த மண்ணில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு மேடிசன் கெய்ஸ்-ஆல் ஈடுகொடுக்க முடியவில் ஆஷ்லே பார்டி 6-1, 6-3 என நெர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று பார்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸ், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். இதில் 7-ம் நிலை வீராங்கனையான இகா, 27-ம் நிலை வீராங்கனையான கோலின்ஸ் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் இகா 4-6, 1-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 29-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் ஆஷ்லே பார்டி- டேனிலே கோலின்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com