ஆசிய தடகள சாம்பியன்ஷிப்- கூடுதலாக இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றது இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்- கூடுதலாக இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றது இந்தியா
Published on

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.

இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.

மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், 4ம் நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம், இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com