கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.
ashmita chaliha
Published on

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.

இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-18 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-19, 21-18 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹீனா அகாச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ரக்‌ஷிதா ராம்ராஜ், சக நாட்டு வீராங்கனையான அஷ்மிதா சலிஹா உடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரவுனக் சவுகான், கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், சனீத் தயானந்த், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com