

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, டென்மார்க் வீராங்கனை லைன் கேயர்பெல்ட் உடன் மோதினார்.
இதில் அஷ்மிதா முதல் செட்டை 23-21 என போராடி கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட டென்மார்க் வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் அஷ்ஷிதா சலிஹா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.