கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.
ashmita chaliha
Published on

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.

இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சகநாட்டு வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அஷ்மித சலிஹா முதல் செட்டை 21-13 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை அஷ்மிதா சலிஹா 21-13 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதுகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com