நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடீரென ஓய்வு முடிவு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார்.
ஆஷ்லே பார்டி
ஆஷ்லே பார்டி
Published on

ஆஸ்திரேலியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. 25 வயதான இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பரிடம் உதவி கேட்டுக்கொண்டேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆஷ்லே பார்டி 2019-ல் பிரெஞ்ச் ஓபனையும், 2021-ல் விம்பிள்டனையும், 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com