சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.இதில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா தோல்வி
Published on

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.

இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 23-21 என அனுபமா உபாத்யாயா கைப்பற்றினார். இதில் சுதாரித்து ஆடிய தைவான் வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதனால் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com