பிரக்ஞானந்தாவுக்கு XUV 400 EV கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்
பிரக்ஞானந்தாவுக்கு XUV 400 EV கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா
Published on

உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com