

கனடாவின் ஆன்டாரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் பிரிவு அரையிறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் பார்ப் சமே உடன் மோதினார்.
இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.