ஆடவர் மல்யுத்தம் போட்டி- அரையிறுதியில் அமன் ஷெராவத் ஏமாற்றம்

ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.
ஆடவர் மல்யுத்தம் போட்டி- அரையிறுதியில் அமன் ஷெராவத் ஏமாற்றம்
Published on

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.

அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.

X

Maalai Malar
www.maalaimalar.com