பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முன்னேறினார் அமன் ஷெராவத்

இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முன்னேறினார் அமன் ஷெராவத்
Published on

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com