காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிக்கு 3 தமிழக வீராங்கனைகள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள தமிழக வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் செல்வகுமார் 
வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள தமிழக வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் செல்வகுமார் 
Published on

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் (17வயதுக்குட்பட்டோர்) பிரிவுக்கான பந்தயம் ஆகஸ்ட் 9-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தவற்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடந்தது.

தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின் (கன்னியாகுமரி) சபரே பிரிவிலும் பங்கேற்றார்கள்.

இந்த 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த 3 பேருக்கும் செல்வகுமார் பயிற்சி அளிக்கிறார்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தை நிர்வகிக்கும் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com