2030 காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்தது. இன்று கிளாஸ்கோ நகரில் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
2030 காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
Published on

2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வந்தது. அதன்படி இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனையடுத்து காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்தது.

இன்று கிளாஸ்கோ நகரில் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், .2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்தியா 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை போட்டியை அகமதாபாத்தில் நடத்த விரும்புகிறது. காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஒலிம்பிக் போட்டிக்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. .

இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com