2026 காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு!

இது அவர் தொடர்ச்சியாக பெறும் மூன்றாவது தங்கப்பதக்கமாகும்.
2026 காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு!
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் 105 கிலோ என 190 கிலோ தூக்கி சாதனைப் படைத்தார். இது தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கமாகும். காமன்வெல்த் போட்டிகளில் இது அவருக்குக் கிடைத்த மூன்றாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கமாகும். 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம் பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர். 2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். ஏற்கனவே இந்தியா ஒரு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தாண்டு தொடரில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com