ஐ.பி.எல். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த மேக்ஸ்வெல்

ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஐ.பி.எல். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த மேக்ஸ்வெல்
Published on

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.

இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com