பிள்ளையார் சன்னிதியில் தோப்புக் கரணம் போடுவது ஏன்?

கோவில்களுக்கு வழிபடச் செல்லும்போது, பலரும் விநாயகரின் சன்னிதி முன்பாக தோப்புக்கரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பிள்ளையார் சன்னிதியில் தோப்புக் கரணம் போடுவது ஏன்?
பிள்ளையார் சன்னிதியில் தோப்புக் கரணம் போடுவது ஏன்?
Published on

கோவில்களுக்கு வழிபடச் செல்லும்போது, பலரும் விநாயகரின் சன்னிதி முன்பாக தோப்புக்கரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இதை தலைச்சிறந்த உடற்பயிற்சி என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

‘தோர்பி’ என்றால் ‘கை’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளால் காதைப் பிடித்துக் கொண்டும், நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டும் முழங்காலை மடக்கி, மடக்கி நிமிர வேண்டும். இதைத் ‘தோர்பிகர்ணம்’ என்பார்கள். அதுவே நாளடைவில் தோப்புக் கரணமாக மாறியது. காதுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. அதை இழுக்கும் பொழுது, ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு அதிக ரத்தம் தலைப் பகுதிக்குச் செல்கிறது. வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து இழுத்து, குனிந்து நிமிரும் பொழுது மூளைக்கு அதிக ரத்தம் பாய்ந்து, சிந்தனை ஆற்றலை உருவாக்குகின்றது.

ஞாபக சக்தியை அதிகரிக்க வைக்கிறது. கற்ற கல்வியில் இங்ஙனம் மெஞ்ஞானத்தில் விஞ்ஞானத்தைப் புகுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com