

பலன்கள்:
1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) - இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும்.
2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) - இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும்.
3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி): - வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும்.
4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம்.
5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம். பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம்.
பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம்.
விபூதியைப் பயன்படுத்துவது ஒரு ஆழமான விஞ்ஞானம். ஆனால் இன்றோ, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நெற்றியில் வெறுமனே பட்டையிட்டுக் கொள்கிறோம். இது போதாதென்று, ஒரு வகையில் பூசிக் கொள்பவன், வேறு விதத்தில் பூசிக் கொள்பவனுடன் ஒத்துப்போக மாட்டான். இது முட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.