வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா தொடங்கியது

வாகைகுளம் வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
வாகைகுளம் வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.
வாகைகுளம் வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.
Published on

அம்பை அருகே வாகைகுளம் வாகைபதியில் உள்ள நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு தண்டிகை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகளும் அன்னதர்மமும், வாகன பவனியும் நடைபெறுகிறது.

இன்று (சனிக்கிழமை) சுவாமி கருட வாகனத்திலும், 3-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிங்க வாகனத்திலும், 4-ம் திருநாளில் அன்ன வாகனத்திலும் 5-ம் திருநாளில் சூரிய வாகனத்திலும், 6-ம் திருநாளிலும் நாக வாகனத்திலும், 7-ம் திருநாளில் பூப்பல்லக்கிலும், 8-ம் திருநாளில் குதிரை வாகனத்திலும், 9-ம் திருநாளில் அனுமன் வாகனத்திலும், 10-ம் திருநாளில் காலை 11 மணிக்கு கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு 2 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திர வாகனத்தில் பவனிவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினசரி காலை மதியம், இரவு மூன்று வேளைகளிலும் சிறப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு உச்சிப்பால் தர்மம், இரவு 8 மணிக்கு அன்ன தர்மம், காலை, மாலை வாகன பவனியும் நடக்கிது.

11-ம் திருநாளான 12-ந் தேதி பகல் 2 மணிக்கு தேரோட்டமும், இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

விழாவில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை சிங்காரி மேளம் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வாகைபதி அன்புகொடி மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com