ஆன்மிகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. அதன்பிறகு கணபதி பூஜை யுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது.
கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கும்ப ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
பின்னர் விமான அபிஷேகமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடந்தது.
முன்னதாக, கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கும்ப ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

