Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி கிட்டும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
இன்றைய ராசிபலன்
Published on

மேஷம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். உறவினர்களின் வருகையால் செலவுகள் உண்டு. விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி கிட்டும்.

மிதுனம்

இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிட நேரிடலாம்.

கடகம்

பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்

மனக்குழப்பம் அகலும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று இன்று முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

மகிழ்ச்சியான நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பஞ்சாயத்து சாதகமாகும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். நண்பர் களின் வழியே விரயம் உண்டு.

துலாம்

உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். எதிர்பாராத வரவு உண்டு. திடீர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள்.

விருச்சிகம்

வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோ கத்தில் சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

7 தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு, வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

மகரம்

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

கும்பம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் தொல்லையுண்டு. ஆரோக்கி யத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. திடீர் செலவுகளால் கையிருப்புக் கரையலாம்.

மீனம்

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்திலிருந்த அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com