Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் உண்டு.

ரிஷபம்

நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.

மிதுனம்

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கடகம்

நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

சிம்மம்

போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

கன்னி

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழில் சீராக நடைபெறும்.

துலாம்

அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்

புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிபெறும்.

மகரம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

கும்பம்

தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com