Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

வளர்ச்சி கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

ரிஷபம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

மிதுனம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வருமானம் உயரும்.

சிம்மம்

நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

கன்னி

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

விருச்சிகம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். குடும்பத்துடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

யோகமான நாள். குடும்பத்தில் அமைதி கூடும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

மகரம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும்.

கும்பம்

தடைகள் விலகி தனவரவு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட விரோதம் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மீனம்

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தனவரவு திருப்தி தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com