

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும்.
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
யோகமான நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள்.
திறமை பளிச்சிடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.
முன்னேற்றம் ஏற்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
யோகமான நாள். திருமணப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர்.
தடைகளும் தாமதங்களும் ஏற்படும் நாள். தனவரவில் தட்டுப்பாடு உருவாகும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.