Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

மிதுனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

கடகம்

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

சிம்மம்

பொருளாதார முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

கன்னி

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

துலாம்

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

விருச்சிகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு.

தனுசு

செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம்.

மகரம்

குடும்பச்சுமை கூடும் நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

கும்பம்

வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.

மீனம்

எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com