Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த முயற்சி வெற்றி தரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

ரிஷபம்

புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

கடகம்

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

எதிர்பாராத லாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழில் வளர்ச்சி உண்டு.

கன்னி

யோகமான நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு கட்டும் முயற்சிக்கு வழிபிறக்கும்.

துலாம்

சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் அமைதிக்குறைவு ஏற்படலாம். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு.

மகரம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

கும்பம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். அலுவலகத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டு.

மீனம்

விரோதங்கள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com