Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.8.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியம் வெற்றி பெறும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

ரிஷபம்

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

கடகம்

நல்ல தகவல் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.

சிம்மம்

மகிழ்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.

கன்னி

யோகமான நாள். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

துலாம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். தொழிலில் தனலாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் கவனம் தேவை.

தனுசு

வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

மகரம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.

கும்பம்

கனவுகள் நனவாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் கூடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com