Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.6.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்
Published on

மேஷம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணி ஆகலாம்.

கடகம்

யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

கன்னி

தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

துலாம்

அலைபேசி மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்

வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

தனுசு

தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கும்பம்

மனக்கலக்கம் அகலும் நாள். பயணத்தால் பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. யாருக்கும் பணப்பொறுப்புகள் சொல்லும் முன் யோசிக்கவும்.

மீனம்

வருமானம் உயரும் நாள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com