Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஆகஸ்ட் 2026: சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Surya narayanar
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-24 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி காலை 9.08 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 1.38 வரை பிறகு திருவாதிரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

கூற்றுவ நாயனார் குரு பூஜை

சர்வ ஏகாதசி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் புறப்பாடு. கூற்றுவ நாயனார் குரு பூஜை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் பவனி. திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - லாபம்

ரிஷபம் - சிறப்பு

மிதுனம் - பாராட்டு

கடகம் - நன்மை

சிம்மம் - வெற்றி

கன்னி - துணிவு

துலாம் - பணிவு

விருச்சிகம் - இரக்கம்

தனுசு - இன்பம்

மகரம் - கடமை

கும்பம் - உண்மை

மீனம் - கடமை

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com