Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஆகஸ்ட் 2026: குச்சனூர் சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Kuchanur sani bhagavan
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-23 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி காலை 11.34 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 3.16 வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சுகம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - நன்மை

கடகம் - தாமதம்

சிம்மம் - அனுகூலம்

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - தெளிவு

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - வெற்றி

மகரம் - நன்மை

கும்பம் - பாராட்டு

மீனம் - விருத்தி

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com