Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Guru bhagavan
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-14 (வியாழன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை இரவு 10 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : திருவோணம் இரவு 6.52 வரை பிறகு அவிட்டம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை

திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமான புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவான மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வரவு

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - செலவு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - அமைதி

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - இன்பம்

விருச்சிகம் - உற்சாகம்

தனுசு - உவகை

மகரம் - துணிவு

கும்பம் - பணிவு

மீனம் - உயர்வு

X

Maalai Malar
www.maalaimalar.com