Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஜூலை 2026: திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Murugan
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-8 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி நண்பகல் 12.05 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : அனுஷம் (முழுவதும்)

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு கண்டருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சட்ட தேரில் பவனி, இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சாதனை

ரிஷபம் - மேன்மை

மிதுனம் - ஊக்கம்

கடகம் - ஆர்வம்

சிம்மம் - ஈகை

கன்னி - பரிவு

துலாம் - பண்பு

விருச்சிகம் - உயர்வு

தனுசு - பாசம்

மகரம் - உதவி

கும்பம் - வரவு

மீனம் - செலவு

X

Maalai Malar
www.maalaimalar.com