

பராபவ ஆண்டு, ஆடி-16 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 10.37 மணி பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : சதயம் இரவு 8.58 வரை பிறகு பூரட்டாதி
யோகம் : அமிர்த / மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் நயினார் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம் - வெற்றி
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - ஈகை
கடகம் - கடமை
சிம்மம் - முயற்சி
கன்னி - பயிற்சி
துலாம் - கவனம்
விருச்சிகம் - தெளிவு
தனுசு - பொறுமை
மகரம் - நன்மை
கும்பம் - அமைதி
மீனம் - பயணம்