திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 1-ந்தேதி நடக்கிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 1-ந்தேதி நடக்கிறது
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 6-ந் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் முக்கிய திருவிழாவாக 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் முதல் நாள் விழா நவம்பர் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 2-ந் தேதியன் று 10-ம் நாள் மகா தீப தரிசனத்துடன் நடைபெற உள்ளது.

டிசம்பர் மாதம் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 3 நாட்கள் அய்யங்குள தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். 6-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் விழா நிறைவு பெறுகிறது. மேலும் இந்த ஆண்டு மகா தீபத்திருவிழா நடைபெறும் நாளான டிசம்பர் 2-ந் தேதி அன்று இரவு 12.12 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரா.ஜெகன்நாதன் மற்றும் விழா குழுவினர், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com